search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகுல் ரோகத்கி"

    ஆதார் திட்டத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AadhaarVerdict #MukulRohatg
    புதுடெல்லி:

    ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி உச்ச நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஆதார் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறுகையில், தரவு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்றார்.


    ‘தரவுகளை பாதுகாக்கும் என விசாரணையின்போது அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இதுகுறித்து சட்டமும் வருகிறது. பெரிய அளவிலான மானியங்களுக்கு ஆதார் பொருத்தமானது என்பதால், தீர்ப்பு பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும். மானியங்களில் நடைபெறும் முறைகேடுகளை களையவும் ஆதார் அவசியம். எனவே, ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார் முகுல் ரோகத்கி. #AadhaarVerdict #MukulRohatgi
    ×